ETV Bharat / state

கோவையில் களிமண் தட்டுப்பாடு.. பாதிக்கபடும் மண்பாண்ட தொழிலாளர்கள்..! - அகல் விளக்குகள் உற்பத்தி

கோவையில் களிமண் கிடைக்காமல் மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்திகை தீப அகல் விளக்குகள் உற்பத்தியை நிறுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

கோவையில் களிமண் தட்டுபாடு
அகல் விளக்குகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2024, 10:46 PM IST

கோயம்புத்தூர்: இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படும் கார்த்திகை தீப திருவிழா வருகின்ற டிசம்பர் மாதம் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மக்கள் தங்களது இல்லங்களிலும், கோயில்களிலும் கார்த்திகை விளக்கு எனப்படும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

இதற்காக மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் உடையார் வீதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சார்ந்த மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் அகல் விளக்குகள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மண்பாண்ட தொழிலாளர் கிருஷ்ணசாமி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இங்கு தயார் செய்யப்படும் அகல் விளக்குகள் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. இதேபோல பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொங்கல் பானைகள் தயார் செய்யும் பணிகளும் இங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், களிமண் எடுத்து வருவதில் பிரச்சனைகள் இருப்பதால் அகல் விளக்குகள் மற்றும் பானைகள் செய்ய போதிய களிமண் கிடைப்பதில்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அகல் விளக்குகள் உற்பத்தி செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர் கிருஷ்ணசாமி கூறுகையில், "நான் 17 ஆண்டுகளாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறேன். மண்பாண்ட உற்பத்தியில் அதிக லாபம் இல்லை. தற்போது கார்த்திகை தீபம் நெருங்குவதால், அகல் விளக்குகள் தயாரிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளோம். அகல் விளக்குகளின் அளவுக்கு தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறோம்.

இதையும் படிங்க: பாம்பன் ரயில்வே பாலத்தில் குறைபாடா? மத்திய ரயில்வே அமைச்சர் கூறியது இதுதான்!

இத்தகைய சூழ்நிலையில், களிமண் எடுத்து வருவதில் சிக்கல் நிலவி வருவதால், மண்பாண்டங்களை செய்ய போதிய களிமண் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் அகல் விளக்கு, பானை உள்ளிட்டவை செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டும் அல்லாது, களிமண் எடுத்து வரும்போது அதிகாரிகள் கெடுபிடி செய்கின்றனர். வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கின்றனர். இதனால் போதிய அளவு களிமண் கிடைப்பதில்லை. தற்போது உள்ள களிமண் ஓரிரு நாட்கள் வேலை செய்ய மட்டுமே வரும். அதன் பின்னர் புதிதாக களிமண் வராமல் வேலை செய்ய முடியாது. இதுதொடர்பாக பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை.

ஆகவே, மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மண்பாண்ட உற்பத்திக்கு மண்ணெடுக்க மாவட்ட நிர்வாகம் தடையில்லா சூழல் உருவாக்க வேண்டும். இல்லையெனில் இந்தத் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது" என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண் எடுப்பதில் நிலவி வரும் சிக்கல் குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் கேட்டபோது, "இது குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம், மண்பாண்ட தொழிலுக்கு களிமண் எடுத்துக்கொள்ளலாம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.