ETV Bharat / state

மதுரை ரூபாலி யானைக்கு கிடைத்த தோழிகள்..! 8 யானைகளுடன் முகாமில் சேர்ப்பு.. - ரூபாலி யானை

மதுரையில் உரிய ஆவணங்களின்றி வளர்க்கப்பட்டு வந்த ரூபாலி என்ற பெண் யானையை மீட்ட வனத்துறை அதிகாரிகள், திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ரூபாலி

author img

By

Published : May 27, 2022, 8:10 PM IST

திருச்சி: மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் 22 வயதுடைய ரூபாலி என்ற பெண் யானை பீகாரில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கி வரப்பட்டு வளர்க்கப்படுவதாக மதுரை மாவட்ட வனத்துறைக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து கடந்த 3 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிர் காப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் ரூபாலி யானையை பறிமுதல் செய்து, திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்றிரவு (மே 26) அதிரடியாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை மருத்துவர்கள், காவல் துறையினர் யானையை பறிமுதல் செய்து, பலத்த பாதுகாப்புடன் திருச்சியிலுள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேவுள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஏற்கெனவே மலாத்தி, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமிலா , இந்து , ரோகினி , இந்திரா என்ற யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ரூபாலி யானை வந்துள்ளதால் மொத்தம் 9 யானைகள் திருச்சி மாவட்ட வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆவணம் இல்லாததால் யானை பறிமுதல்.. தலைமறைவான பாகன்.. போராடிய வனத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.