ETV Bharat / state

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு தற்காலிக விமான சேவை - கரோனா வைரஸ் அச்சுறுத்தல்

திருச்சி: நாளை முதல் மூன்று நாள்களுக்கு மலேசியாவிற்கு விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Temporary flight services started  from Trichy to Malaysia

author img

By

Published : Mar 31, 2020, 10:38 AM IST

Updated : Mar 31, 2020, 12:41 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளன.

இதனால், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த பலர் சொந்த நாட்டிற்கு திரும்பமுடியாமல் தவித்துவந்தனர்.

இந்நிலையில், திருச்சியில் தவித்துவரும் மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் மூன்று நாள்கள் மலேசியாவுக்கு சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது. திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு இயக்கப்படும் மலிண்டோ விமானம் மூன்று நாள்களுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் ஏப்ரல் ஒன்றாம் தேதி இரவு 10.35 மணியளவில் திருச்சியை வந்தடைந்து. பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் இரவு 11.25க்கு மலேசியாவிற்கு திரும்புகிறது.

இதேபோன்று, ஏப்ரல் 2 மற்றும் 4ஆம் தேதிகளில் மலேசியாவிலிருந்து காலை 09.35க்கு வந்தடைந்து மீண்டும் காலை 10.25க்கு புறப்படுகிறது.

இதையும் படிங்க:கரோனா சேவைகளுக்காக சிறப்பு ரயில் ’அர்ஜூன்’ அறிமுகம்

Last Updated : Mar 31, 2020, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.