ETV Bharat / state

திருச்சியில் ஆசிரியைகளுக்கான கைப்பந்து போட்டி!

திருச்சி: பள்ளி ஆசிரியைகளுக்கான கைப்பந்து போட்டியில் பிஷப் ஹீபர் பள்ளி ஆசிரியைகள் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

teachers handball
author img

By

Published : Aug 18, 2019, 12:39 PM IST

தென்னிந்திய திருச்சபையின் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியைகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் 10 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியைகளை கொண்ட அணிகள் கலந்துகொண்டன. இறுதிப்போட்டிக்கு திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியும், வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியும் தேர்வாகின.

திருச்சியில் ஆசிரியைகளுக்கான கைப்பந்து போட்டி

இறுதிப்போட்டியில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி அணி வெற்றி பெற்றது. திருச்சி மறைமாவட்ட தலைவர் தங்கையா, வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும், பரிசும் வழங்கினார். இந்த விழாவில் வெஸ்ட்ரி பள்ளி தலைமையாசிரியர் சைமன் சுகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்திய திருச்சபை பள்ளி ஆசிரியைகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Intro:திருச்சியில் நடந்த மகளிர் கைப்பந்து போட்டியில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி வெற்றி பெற்றது.

Body:திருச்சி: திருச்சியில் நடந்த மகளிர் கைப்பந்து போட்டியில் பிஷப் ஹீபர் பள்ளி அணி வெற்றி பெற்றது. தென்னிந்திய திருச்சபையின் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு இடையிலான மகளிர் கைப்பந்து போட்டி திருச்சி வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று காலை தொடங்கியது. இதில் 10 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியைகளை கொண்ட அணிகள் கலந்து கொண்டன. மொத்தம் 9 போட்டிகள் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியும், வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் பள்ளியும் தேர்வு பெற்றது. இறுதிப்போட்டி மாலை நடைபெற்றது. இதில் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி அணி வெற்றி பெற்றது. திருச்சி மறைமாவட்ட தலைவர் தங்கையா வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும், பரிசும் வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த வெஸ்ட்ரி பள்ளி அணிக்கும் பரிசு வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் வெஸ்ட்ரி பள்ளி தலைமையாசிரியர் சைமன் சுகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்திய திருச்சபை பள்ளிகளுக்கு இடையிலான மகளிர் கைப்பந்து போட்டி முதல் முறையாக தற்போது நடத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டி: சைமன் சுகுமார் வெஸ்ட்ரி பள்ளி தலைமையாசிரியர்.

Conclusion:தென்னிந்திய திருச்சபை பள்ளிகளுக்கு இடையிலான மகளிர் போட்டி முதல் முறையாக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.