ETV Bharat / state

“தமிழகத்தில் ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் அதிகம்” - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி! - திவ்யா குப்தா

Child commission: பெரம்பலுார், அரியலுார் பகுதியில் ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் அதிகமாக இருப்பதாகவும், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திவ்யா குப்தா வலியுறுத்தியுள்ளார்.

child commission
தமிழகத்தில் ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் அதிகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2023, 10:13 AM IST

திருச்சி: திருச்சியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் திவ்யா குப்தா செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், 'தமிழகத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து 3 அமர்வுகளாக ஆய்வு செய்யப்படுகிறது. இந்தியா ஆரோக்கியமான மற்றும் வலிமையான தேசமாக உருவாக, குழந்தைகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அதற்காக, குழந்தைகள் மற்றும் அந்த துறையினர் சந்திக்கும் பிரச்னைகளை முற்றிலுமாக தீர்க்க வேண்டும்.

திருச்சி, பெரம்பலுார், அரியலுார் ஆகிய மாவட்டங்களில் குழந்தைகள் உரிமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கரோனா பாதிப்பால், 45 இறப்புகள் நிகழ்ந்தன என்பதைத் தவிர, அடையாளம் காணக்கூடிய வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. கரோனா‌ பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இதுவரை அரசிடமிருந்து இழப்பீடு பெறவில்லை.

உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யப்படும். பெரம்பலுார், அரியலுார் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 770 பேரிடம் குழந்தைகள் பிரச்னை தொடர்பாக மனு பெறப்பட்டது. அதில் 97 சதவீதம் குழந்தைகள் ஒற்றை பெற்றோருக்குச் சொந்தமான மிக மோசமான சூழ்நிலையில் உள்ளனர்.

அதாவது தந்தை கரோனா பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு நோய் அல்லது தற்கொலை போன்ற காரணங்களால் இறந்து விட்ட நிலையில், தாயின் பராமரிப்பில் உள்ளனர். சில குழந்தைகள் பெற்றோர் இல்லாததால் தாத்தா, பாட்டியுடன் மற்றும் உறவினர்களுடன் வசிக்கின்றனர். இது மிகவும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சோகமான ஆபத்தான நிலை ஆகும்.

ஒற்றை பெற்றோர் உள்ள பிள்ளைகளால் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். நோய்களால்‌ இவ்வளவு இறப்புகள் ஏற்பட்டது பற்றி சுகாதாரத் துறையினரிடம் கேட்டதில் சரியான விளக்கம் பெற முடியவில்லை. இருப்பினும், இப்போது உள்ள தரவுகளின் முழுமையாக மதிப்பீடுகளை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுத்து‌ இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளேன்.

இது ஒரு பின்னோக்கிய ஆய்வாக இருக்கும் என்பதால், கால அவகாசம் தேவைப்படும். அதனால், 15 நாட்களுக்குப் பின் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய மீண்டும் வருவேன். மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் இதை ஒரு விழிப்புணர்வு அழைப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மூட்டை மூட்டையாக கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள்.. நெல்லையில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.