ETV Bharat / state

எந்தச் சூழ்நிலையிலும் மீட்புப் பணி நிறுத்தப்பட மாட்டாது -ராதாகிருஷ்ணன்!

திருச்சி: ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி எந்த சூழ்நிலையிலும் நிறுத்தப்பட மாட்டாது என பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Oct 28, 2019, 12:34 PM IST

Updated : Oct 28, 2019, 12:42 PM IST

அழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன்,

ரிக் இயந்திரகளைக் கொண்டுவரப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. தொய்வில்லாமல் நடைபெற்று வரும் இந்தப் பணியில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் பெற்றோருக்கு தெரிவிக்கப்படுகிறது.

இந்த மீட்புப் பணியில் பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மனோதத்துவ நிபுணர்கள் உதவியுடன் சுஜித் நிலையைப் பற்றி அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை சுஜித் கீழே விழாமல் இருக்க ஏர்லாக் முறை பயன்டுத்திதப்பட்டுள்ளது. புதிய ஆழ்துளைக் கிணறுக்கு 98 அடி துளையிட வேண்டும். பாறைகள் இருப்பதால் சற்று தாமதம் ஆகின்றது. பாறையை உடைத்து எடுத்தால் ஆழ்துளைக் கிணறு நொறுங்கி குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குழி தோண்டும் பணி 80 அடியைச் சென்றடைய 12 மணி நேரமாகும்.

எந்தச் சூழ்நிலையிலும் மீட்புப் பணி நிறுத்தப்பட மாட்டாது, மீட்புப் பணி தொடர்ந்துகொண்டே இருக்கும் விரைவில் சுஜித் மீட்டெடுக்கப்படுவான் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : #SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் உடனுக்குடன்

Intro:Body:

radhakrishnan

Conclusion:
Last Updated : Oct 28, 2019, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.