திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்த்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 25ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த மீட்புப் பணியில் ஐந்தாவது நாளான இன்று 88அடி ஆழத்திலிருந்து சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
உடற்கூறாய்விற்காக சிறுவன் சுஜித்தின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.