திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் உடல் பாத்திமா புதூர் கல்லறைப் பகுதியின் அருகே பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், பொதுமக்கள் சிறுவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சுஜித்துக்கு அஞ்சலி செலுத்த நீணட வரிசையில் நின்றிருந்த பொதுமக்களின் அழுகுரல் அப்பகுதி முழுவதும் பரவியது.
உடலை அடக்கம் செய்தபின்னரும் சுஜித்துக்கு அஞ்சலி செலுத்த மக்கள் சாரை சாரையாக இப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதையும் படிங்க : உயிரிழந்த சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்பு!