ETV Bharat / state

திருச்சியில் ரூ.1 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது! - Trichy crime news

திருச்சியில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற சார்பதிவாளர் கைது!

author img

By

Published : Dec 1, 2022, 4:00 PM IST

திருச்சி: திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பாக்குறிச்சியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார். அதன் பேரில் திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அணுகியுள்ளார்.

அப்போது வாங்கவிருக்கும் விவசாய நிலத்திற்கு சந்தை மதிப்பாக ஒரு லட்சம் ரூபாயை நிர்ணயம் செய்து பத்திரப்பதிவு செய்ய திருவரம்பூர் சார்பதிவாளர் பாஸ்கரனை அணுகியுள்ளார். அதற்கு சார்பதிவாளர் பாஸ்கரன், “நிலத்தினை அரசு மதிப்பீட்டின்படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியும். விவசாய நிலமாக 47(A)ன் கீழ் பத்திரப்பதிவு செய்ய வேண்டுமானால், எனக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக்குமார், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில், இன்று (டிச.1) சார்பதிவாளர் பாஸ்கரன் அசோக்குமாரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: விதவை சான்றிதழுக்கு லஞ்சம் பெற்ற விஏஓ - வைரலாகும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.