நடிகை சனம் ஷெட்டியின் சமூக வலைதள கணக்கிற்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய கல்லூரி மாணவர் காவல் துறையினரால் இன்று (ஜூலை 6) கைது செய்யப்பட்டார்.
’அம்புலி’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சனம் ஷெட்டி. மேலும் இவர் கலந்து கொண்ட ‘பிக்பாஸ் சீசன் 4’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். இவரது வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள கணக்கிற்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள், புகைப்படங்களை அனுப்பி வந்துள்ளார்.
நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, அடையாறு சைபர் கிரைம் பிரிவில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். அதற்கான உரிய ஆதாரங்களையும் காவல்துறையினரிடம் அவர் வழங்கினார்.
கல்லூரி மாணவர் கைது
இந்நிலையில் தற்போது ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக, திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர், ராய் ஜான் பால் (21) கைது செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் பிரிவினரின் விசாரனைக்குப் பின்னர், கல்லூரி மாணவர் திருவான்மியூர் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: நடிகர் பொன்வண்ணன் மகள் திருமணம் - முதலமைச்சர் நேரில் வாழ்த்து!