ETV Bharat / state

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து! - ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து

திருச்சி : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து நான்காம் நாளான இன்று (டிச.28) உற்சவர் நம்பெருமாள் வெண்பட்டு அலங்காரத்தில் முத்து ஒட்டியாணம் அணிந்து எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து
author img

By

Published : Dec 28, 2020, 7:26 PM IST

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து வைபவத்தைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் ராப்பத்து வைபவம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (டிச.28) காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மூலவர் ரங்கநாதப்பெருமாள் முத்தங்கி சேவை தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு ஆரியபட்டால் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு ஆரியபட்டால் நுழைவு வாயில் திறக்கப்பட்டது. அதேபோல் ஒரு மணிக்கு சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டது. ஒரு மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட உற்சவர் நம்பெருமாள், 2 மணிமுதல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

ராப்பத்து நான்காம் திருநாளான இன்று (டிச.28) உற்சவர் நம்பெருமாள் வெண் பட்டில், முத்து ஒட்டியாணம், ரத்தின அபயஹஸ்தம், திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் 9 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ரங்கநாதரின் முத்தங்கி சேவையையும், உற்சவர் நம்பெருமாள் சேவையையும் தரிசித்தனர்.

இதையும் படிங்க: ராப்பத்து 3ஆம் நாள்: சாய் முத்து கிரீட அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.