108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கியது.
அருளாசி
ராப்பத்து வைபவத்தில் உற்சவர் நம்மாழ்வார், நாள்தோறும் ஒரு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அருளாசி வழங்கினார்.
கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராப்பத்து வைபவத்தில் நாள்தோறும் ஒரு அலங்காரத்தில் உற்சவர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்.
மோட்சம்
ராப்பத்து உற்சவத்தின் 10 ஆம் நாளான நேற்று (ஜன. 03) நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசலை கடந்து சந்திர புஷ்கரணியில் எழுந்தருளினார்.
அதன் பின்னர் அங்கு தீர்த்தவாரி கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். அதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை நம்மழ்வார் மோட்ச்சத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.
இதையும் படிங்க: பகல்பத்து 7ஆம் நாள்: முத்து கிரீட அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்