ETV Bharat / state

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு - திருச்சி மாவட்டச் செய்திகள்

திருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

Srirangam Ranganathar
Srirangam Ranganathar
author img

By

Published : Jan 6, 2020, 7:55 AM IST

Updated : Jan 6, 2020, 8:24 AM IST

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்னும் சிறப்புக்குரிய இக்கோயிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு, வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்.

வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கியது. அதன்பின் பகல் பத்து உற்சவம் கடந்த 27ஆம் தேதியும், பகல் பத்து உற்சவத்தின் 10ஆம் நாளான ஜனவரி 5ஆம் தேதி நாச்சியார் திருக்கோலத்தில் ரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

ராஜ அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதனைக் கடந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என்று கோஷமிட்டு ரங்கநாதரை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நான்காயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சொர்க்கவாசல் நிகழ்ச்சியின் முதல்நாளான இன்று சொர்க்கவாசல் இரவு 10 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். நாளை முதல் 8 நாள்களுக்கு மதியம் 1 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரம்!

Intro:வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் ரங்கா ரங்கா என்று பரவச கோஷமிட்டனர்.Body:திருச்சி:
வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் ரங்கா ரங்கா என்று பரவச கோஷமிட்டனர்.
108 வைணவத்திருத்த
லங்களில் முதன்மையான
தும் பூலோக வைகுண்டம்
என்ற சிறப்புக் குரியது
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
கோயிலாகும். ஆண்டு
தோறும் மார்கழி மாதம்
நடைபெறும் வைகுண்ட
ஏகாதசி விழாவில் உள்ளூர், வெளியூர், மற்றும்
வெளிமாநிலங்களிலிருநந்தும் லட்சகணக்கான
பக்தர்கள் சாமி தரிசனம்
செய்ய வருவார்கள்.
வைகுண்ட ஏகாதசி விழா
கடந்த டிசம்பர் 26ம் தேதி
திருநெடுந்தாண்டகம்
நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதன் பின் பகல்
பத்து உற்சவம் கடந்த 27ம்
தேதி துவங்கியது. பகல் பத்து உற்சவத்தின் 10ம்
நாளாகிய நேற்று
(5ம் தேதி) நம்பெருமாள்
மோகினி அலங்காரம்
எனப்படும் நாச்சியார்
திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
அளித்தார்.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி அலங்காரத்துடன் புறப்பாடாகி அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசலை கடந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரங்கா என்று பரவச கோஷமிட்டனர். சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்த நம்பெருமாள் காலை 7 மணி முதல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் விடிய விடிய நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோவிலை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு ராஜகோபுரத்துக்கு 235 அடி உயரத்திற்கு மாலை அணிவிக்கப்படுள்ளது. அனைத்து கோபுரங்களும், கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் நாளான இன்று சொர்க்கவாசல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். நாளை முதல் 8 நாட்களுக்கு மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அந்த சமயங்களில் மூலஸ்தானத்தை தரிசிக்கும் பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 20 நாட்களுக்கு மூலவரான ரங்கநாத பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
Last Updated : Jan 6, 2020, 8:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.