ETV Bharat / state

ஸ்ரீரங்கத்தில் நாளை சித்திரைத் தேரோட்டம்.. - ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் காணிக்கைகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இதற்கென உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் சேருகிறார்.

srirangam-chithirai-car-festival-april-29 ஸ்ரீரங்கம் நாளை சித்திரைத் தேரோட்டம்

author img

By

Published : Apr 28, 2022, 9:46 AM IST

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் தேர்த்திருவிழா 10 நாட்களுக்கு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் நம்பெருமாள் புறப்பாடும், ஸ்ரீரங்கத்தின் சுற்றுப் பகுதிகளில் மண்டகப்படிகளும், இரவு வாகனப்புறப்பாடுகளும் நடந்து வருகின்றன.

இதனிடையே, 8 ஆம் திருநாளான நேற்று இரவு தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா, சித்திரைத் தேர்நிலையருகே வையாளி நடந்தன. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (ஏப்ரல் 29 ஆம் தேதி) காலை நடைபெறுகிறது. இதற்கென உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் சேருகிறார்.

நம்பெருமாள்  வெள்ளி குதிரை வாகனத்தில் பக்தர்களுக்குச் சேவை

அடுத்து 5.30 முதல் 5.45 மணிக்குள் மேஷ லக்னத்தில் தேர்த்தட்டில் எழுந்தருள்கிறார். காலை 6.30 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்படும். தேர்த் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் காணிக்கைகள் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேரோட்டம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து மங்கள பொருட்கள் இன்று ( ஏப்ரல் 28) ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் சம்பந்த உறவும், மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலமாக இருந்து வருகிறது.

நாளை கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் , ஸ்தானீகர்கள் பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்களை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சமர்ப்பிக்கவுள்ளனர். அவற்றை வரவேற்றுப் பெற்றுக்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை ரங்கநாதர் கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் நாளை சித்திரைத் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் நாளை சித்திரைத் தேரோட்டம்

சூடிக் கொடுத்த சுடர்க் கொடி: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலையுடன் பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக் கொடுத்த சுடர்க் கொடி என்ற சிறப்பு பெயரும் ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் சித்திரைத்தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தும் , ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்திலிருந்தும் பரஸ்பரம் மங்கள பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் சித்திரை தேர் விருப்பன் திருநாள் இன்று காலை வெள்ளி குதிரை வாகனத்தில் பக்தர்களுக்குச் சேவை சாதித்தார், வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே வெள்ளி குதிரை வாகனம் பவனி வருவது குறிப்பிடத்தக்கது. நாளை அதிகாலை ஸ்ரீரங்கம் சித்திரைத்தேரோட்டத்தை நேரலையில் உங்கள் ஈடிவி பாரத்தில் நேரலையில் காணலாம்.

இதையும் படிங்க: ஸ்ரீரங்கம்: வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.