ETV Bharat / state

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா

திருச்சி: நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ரீரங்கம் உற்சவர் நம்பெருமாள் இன்று (ஜன 15) வெளிப்புற உற்சவம் நடைபெற்றது.

srirangam car festival celebration
srirangam car festival celebration
author img

By

Published : Jan 15, 2021, 2:02 PM IST

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை வட இந்தியர்களால் சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. அதேபோல் மாட்டுப் பொங்கல் தினம் கணு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நேற்று (ஜன. 14) சங்கராந்தி விழா நடைபெற்றது.

இதில் உற்சவர் நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று (ஜன. 15) கணு புறப்பாடு நடைபெற்றது. இதில் உற்சவர் ரங்கநாதர் முத்துக்குறி, முத்துமாலை அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பாரிவேட்டை நடைபெறுகிறது.

இந்த வேட்டையின்போது உற்சவர் நம்பெருமாள் ராஜகோபுரம்வரை வந்துவிட்டு திரும்பினார். கரோனா ஊரடங்கு நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் உற்சவர் நம்பெருமாள் வெளி உற்சவம் கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெறவில்லை. உள்புற உற்சவம் மட்டுமே நடைபெற்று வந்தது. அந்த வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் முதல் முறையாக பாரி வேட்டையின்போது உற்சவர் நம்பெருமாள் இன்று வெளி உற்சவத்தில் உலா வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...தமிழில் அஞ்சல் துறை தேர்வு எழுதலாம் - சு. வெங்கடேசன் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.