ETV Bharat / state

ஸ்ரீரங்கம் கரோனா அன்னதானத்துக்கு ஸ்ரீமத் ஆண்டவன் டிரஸ்ட் உதவிக்கரம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் கரோனா அன்னதானத் திட்டத்திற்கு, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் அறக்கட்டளை சார்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் கரோனா அன்னதானத்துக்கு  ஸ்ரீமத் ஆண்டவன் டிரஸ்ட் உதவிக்கரம்
ஸ்ரீரங்கம் கரோனா அன்னதானத்துக்கு ஸ்ரீமத் ஆண்டவன் டிரஸ்ட் உதவிக்கரம்
author img

By

Published : May 17, 2021, 6:38 PM IST

வழிபாட்டுத் தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீர், உணவுப் பொட்டலங்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின் படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தலின்படியும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் தினசரி ஸ்ரீ ரெங்கா ரெங்கா கோபுர வாயிலில், முகக் கவசம் சுமார் 100 நபர்களுக்கும், கபசுரக் குடிநீர் 200 நபர்களுக்கும், வாழை இலையில் கட்டப்பட்ட உணவுப் பொட்டலங்கள் 700 நபர்களுக்கும் வழங்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம், திருச்சி அரசு மருத்துமனையில் கரோனா சிகிச்சைப் பெறுபவர்கள் 100 நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலின் உப கோயில்களான உறையூர் ஸ்ரீநாச்சியார் கோயில் , திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயில், அன்பில் ஸ்ரீமாரியம்மன் கோயில்கள் மூலமாக தினமும் தலா 50 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அன்னதான திட்டத்துக்கு உதவும் பொருட்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்மரத்தின் அறக்கட்டளை சார்பாக ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் அன்னதான திட்டத்திற்கு முதற்கட்டமாக அரிசி, துவரம் பருப்பு , உளுந்து பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, சமையல் எண்ணெய்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

ஸ்ரீமத் ஸ்ரீனிவாச கோபால மகாதேசிக சுவாமிகள் இந்தப் பொருட்களை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர் சுந்தர் பட்டரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், புலவர் கிருஷ்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கரோனா நிவாரண நிதி: ஒரு கோடி ரூபாய் வழங்கிய அதிமுக

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.