ETV Bharat / state

திருச்சியில் தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி! - திருச்சியில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி

திருச்சி: பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, தனியார் அமைப்பு சார்பில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

-training-for-students-at-trichy
author img

By

Published : Aug 27, 2019, 5:31 PM IST

திருச்சி மணிகண்டம் அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, ஒரு இளைஞர் அமைப்பு சார்பில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இளைஞர் அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் மற்றும் நிர்வாகிகள், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தனியார் அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் பாண்டியராஜ், "கடந்த நான்கு ஆண்டுகளாக வட மாநிலங்களில் செயல்பட்டு வந்த, இந்த அமைப்பு தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 20 கல்லூரிகளில் இந்த அமைப்பு உள்ளது. இது ஒரு அரசியல் சாராத அமைப்பாகும். இதன்மூலம் மாணவ மாணவிகளை தொழில்முனைவோராகவும், தன்னம்பிக்கை உடையவர்களாக ஆக்குவதும் இந்த அமைப்பின் நோக்கமாகும்.

தொழில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விரைவில் தேசிய அளவிலான தொழில் நிறுவனங்களை திரட்டி ஒரே நேரத்தில் ஒரு லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வகையில் இந்த தனியார் பொறியியல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது" என்று கூறினார்.

Intro:திருச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு யூத் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

Body:திருச்சி:
திருச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு யூத் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
யூத் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் திருச்சி மணிகண்டம் அருகே உள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரிகள் மாணவ மாணவிகளுக்கான தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இதில் யூத் ஆப் இந்தியா அமைப்பின் தென்னிந்திய பொறுப்பாளர் பாண்டியராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் கல்லூரி செயலாளர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது யூத் ஆஃப் இந்தியா தென்னிந்திய பொறுப்பாளர் பாண்டியராஜ் செய்தியாளரிடம் பேசுகையில்,
யூத் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு 20 நாடுகளில் செயல்படும் ஒரு உலகளாவிய அமைப்பாகும். இந்தியாவிலும் பல மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக வட மாநிலங்களில் இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. தற்போதுதான் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 20 கல்லூரிகளில் இந்த அமைப்பு உள்ளது .
இது ஒரு அரசியல் சாராத அமைப்பாகும். இதன்மூலம் மாணவ மாணவிகளை தொழில்முனைவோராகவும், தன்னம்பிக்கை உடையவர்களாக ஆக்குவதும் இந்த அமைப்பின் நோக்கமாகும். உலக அளவில் உள்ள தொழில் முதலீட்டாளர்களிடம் நம் நாட்டு மாணவ-மாணவிகளை அறிமுகம் செய்து வைக்கும் பணியை நாங்கள் மேற்கொள்கிறோம். மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்கள் குறித்து மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அந்த திட்டங்கள் மூலம் எப்படி பயன் அடைவது என்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தொழில் தொடங்க கடன் பெறுவது எப்படி? போன்ற வழிகாட்டுதலையும் நாங்கள் மேற்கொள்கிறோம். மத்திய அரசு மட்டுமின்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிறந்த திட்டங்களும் மாணவர்கள் மத்தியில் எடுத்துக் கூறப்படும். தொழில்முனைவோருக்கும், அரசுக்கும், மாணவ மாணவிகளுக்கும் இடையே இந்த அமைப்பு பாலமாக செயல்படுகிறது. விரைவில் தேசிய அளவிலான தொழில் நிறுவனங்களை திரட்டி ஒரே நேரத்தில் ஒரு லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த வகையில் திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி இன்று அளிக்கப்பட்டது என்றார்.

Conclusion:விரைவில் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று பாண்டியராஜ் கூறினார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.