ETV Bharat / state

பெண் வேட்பாளரைத் தாக்கிய காவல் துறையினர்: அதிர்ச்சி வீடியோ! - வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்தும் பெண் வேட்பாளர்

திருச்சி: வாக்கு எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்த முயற்சித்ததாகக் கூறி பெண் வேட்பாளரை காவல் துறையினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண் வேட்பாளரை தாக்கும் போலீசாரின் வீடியோ

author img

By

Published : Jan 2, 2020, 9:24 PM IST

திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20ஆவது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜக, சுயேச்சை என 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு டிசம்பர் 30ஆம் தேதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் மங்கம்மாள்புரம், சங்கமராஜபுரம், ஆதிகுடி ஆகிய கிராம மக்கள் வாக்களித்தனர்.

பெண் வேட்பாளரை தாக்கும் போலீசாரின் வீடியோ

அப்போது மதியத்திற்கு பிறகு வாக்குச்சீட்டில் சுயேச்சை வேட்பாளர் செல்வராணி போட்டியிட்ட சின்னம், பெயரும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் செல்வராணி அப்போதே லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முறையிட்டதால் 2 மணி நேரமாக வாக்குபதிவை நிறுத்தி வைத்தனர். இதன் பிறகு பாதிக்கப்பட்ட வேட்பாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் பெற்ற அலுவலர்கள் மீண்டும் வாக்குப்பதிவினை நடத்தினர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் செல்வராணி மறுவாக்குப் பதிவு நடத்திட திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் புகாரளித்தார். இந்நிலையில், இன்று லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் குமுலூர் வேளாண் அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. சுயேச்சை வேட்பாளர் செல்வராணி வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு எண்ணிக்கையைத் தடுத்தி நிறுத்தினார்.

அப்போது வாக்கு மையத்திற்குள் வந்த காவல் துறையினர் பெண் வேட்பாளரைத் தாக்கி வாக்கு மையத்தினை விட்டு வெறியேற்றினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பெண் வேட்பாளரை காவல் துறையினர் தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வெற்றி வாகை சூடிய முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா!

Intro:வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முயற்சித்த பெண் வேட்பாளரை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. Body:திருச்சி:
வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முயற்சித்த பெண் வேட்பாளரை போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 வது வார்டு் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேர் போட்டி யிட்டனர்.
இதற்கான வாக்குபதிவு கடந்த 30ம் தேதி அன்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த வாக்கு சாவடியில் மங்கம்மாள்புரம், சங்கமராஜபுரம், ஆதிகுடி ஆகிய கிராம மக்கள் வாக்களித்தனர். அப்போது மதியத்திற்கு பிறகு வாக்குசீட்டில் சுயேட்சை வேட்பாளர் செல்வராணி போட்டியிட்ட சின்னம மற்றும் பெயரும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து சுயேட்சை வேட்பாளர் செல்வராணி அப்போதே லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலரும் , தேர்தல் நடத்தும் அதிகாரிகளியிடம் முறையிட்டதால் அதிகாரிகள் 2 மணி நேரமாக வாக்குபதிவை நிறுத்தி வைத்தனர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட வேட்பாளரிடம் எழுத்துபூர்வமாக புகார் பெற்ற அதிகாரிகள் மீண்டும் வாக்குபதிவினை நடத்தினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சுயேட்சை வேட்பாளர் செல்வராணி மறு்வாக்கு பதிவு நடத்திட திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் இன்று லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் குமுலூர் வேளாண் அறிவியல் கல்லூரியில் எண்ணப்பட்டு வருகிறது. சுயேட்சை வேட்பாளர் செல்வராணி வாக்கு எண்ணிக்கையின் போது, சுயேச்சை வேட்பாளர் வாக்கு எண்ணிக்கையை தடுத்தி நிறுத்தினார்.
வாக்கு மையத்திற்குள் வந்த போலீஸார் பெண் வேட்பாளை தாக்கி வாக்கு மையத்தினை விட்டு வெறியேற்றினர்.
இதனால் வாக்கு மையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பெண் வேட்பாளரை போலீசார் தாக்கிய அதிர்ச்சி வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.