ETV Bharat / state

கதறும் காவலர்கள் கருணை காட்டுவாரா கண்காணிப்பாளர்..! - Mercy Supervisor

திருச்சி எஸ்பியின் கட்டுப்பாட்டின் கீழ் 5 கோட்டங்கள் உள்ளதால் போலீசாரை ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 269 பேரை அதிக தூரம் பணியிட மாற்றம் செய்து அதிரடி காட்டியிருக்கிறார் கண்காணிப்பாளர்.

கதறும் காவலர்கள் கருணை காட்டுவாரா கண்காணிப்பாளர்..!

author img

By

Published : Jun 5, 2022, 9:59 AM IST

திருச்சி: எஸ்பியின் கட்டுப்பாட்டின் கீழ் மணப்பாறை, ஜீயபுரம், திருவெறும்பூர், லால்குடி, முசிறி ஆகிய 5 கோட்டங்கள் வருகின்றன. இதில் மூன்று வருடங்கள் ஒரே ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசாரை பணியிட மாற்றம் செய்வது வழக்கமானது என்றாலும், ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 269 பேரை அதிக தூரம் பணியிட மாற்றம் செய்து அதிரடி காட்டியிருக்கிறார் கண்காணிப்பாளர்.

இப்போது 50 கி.மீ, முதல் 100 கி.மீ. வரை அதிக தூரம் பணியிட மாற்றம் செய்து போலீசாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார் எனப் போலீஸ் துறையில் புலம்பல்கள் கேட்கின்றது. மொத்தமாக ஐந்து உட்கோட்டங்கள் உள்ளன. இதன் எல்லைக்குள்பட்ட 35 ஸ்டேஷன்களில் பணியாற்றும் எஸ்ஐ, ஏட்டு முதல் போலீசார் உள்ளிட்ட வரை 269 பேரை எஸ்.பி சுஜீத்குமார் கடந்த 28ஆம் தேதி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதில் 5 வருடங்களாக பணியாற்றும் பல போலீசார் அதே உட்கோட்டத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாகவும், 3 வருடங்கள் பணியாற்றியவர்கள் பழிவாங்கப்பட்டு இருக்கின்றனர் எனக் குமுறுகிறார்கள். சில போலீசார் குடும்ப பிரச்சினைகள், உடல்நிலைப் பாதிக்கப்பட்ட நிலையில் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு வாரமே உள்ளதால் கை காலில் விழுந்து பிள்ளைகளுக்கு இடம் வாங்கியவர்கள் இப்பொழுது செய்வதறியாது திகைக்கிறார்கள். எனவே மத்திய மண்டல ஐஜி, திருச்சி சரக டிஐஜி, ஆகியோர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எஸ்பி, சுஜீத்குமார் போலீசாரின் பணியிட மாற்றத்தை மறு பரிசீலனை செய்து, பணியையும் ,குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு இயல்பாக பணியாற்றும் வகையில் பணியமர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 40 ஆயிரம் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் - தாம்பரம் ஆணையர் ரவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.