ETV Bharat / state

பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டதற்கு பெற்றோர்கள் போராட்டம்!

திருச்சி: சீல் வைக்கப்பட்ட தனியார் பள்ளியின் மாணவ மாணவிகள் பெற்றோருடன் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

partents-protest
author img

By

Published : Jun 21, 2019, 2:19 PM IST

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் பிளாசம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் என்ற மழலையர் பள்ளி மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுவந்தது. இங்கு 220 மாணவ மாணவிகள் எல்கேஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை பயின்றுவந்தனர். விதிகளின்படி பள்ளி செயல்படும் கட்டடம் வாடகை நிலமென்றால் 30 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமை பெற்றதற்கான ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த வகையில் இந்த பிளாசம் பள்ளி அறிக்கையை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், இது விதிமீறலாகும் என்றும் இன்று காலை அந்தப் பள்ளிக்கு கல்வி அலுவலர்களால் சீல் வைக்கப்பட்டது.

பள்ளிக்கு சீல்-பெற்றோர்கள் போராட்டம்

இதனால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்று கூறி பெற்றோர்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் பெற்றோர் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் அலுவலர்கள் மாணவ மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.

ஆனால், தங்களது குழந்தைகள் இந்தப் பள்ளியில்தான் பாதுகாப்புடன் கல்வி கற்க முடியும் என்று பெற்றோர் தெரிவித்தனர். இது குறித்து பள்ளியின் தாளாளர் சாருமதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், '30 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு கேட்டு நில உரிமையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால், அவர் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார்.

திடீரென அலுவலர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு சீல் வைத்து உள்ளனர். வேண்டுமென்றே என்னை குறிவைத்து அலுவலர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதை சட்டப்படி எதிர்கொள்வோம்' என அவர் தெரிவித்தார்.

Intro:திருச்சியில் சீல் வைக்கப்பட்ட தனியார் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோருடன் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Body:திருச்சி: சீல் வைக்கப்பட்ட தனியார் பள்ளியின் மாணவ மாணவிகள் பெற்றோருடன் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் பிளாசம் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் என்ற மழலையர் பள்ளி கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இங்கு 220 மாணவ மாணவிகள் எல்கேஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை பயின்று வந்தனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் விதிகளை மீறி செயல்படும் மழலையர் பள்ளிகளின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் தயாரித்தது. இதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வகையில் மேலகல்கண்டார் கோட்டையில் செயல்பட்டு பிளாசம் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விதிகளின்படி பள்ளி செயல்படும் கட்டடம் வாடகை நிலமென்றால் 30 ஆண்டுகளுக்கு குத்தகை உரிமை பெற்றதற்கான ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில் இந்த பிளாசம் பள்ளி 30 ஆண்டுகால அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இதனடிப்படையில் இது விதிமீறலாக கருதப்பட்டு இன்று காலை அந்த பள்ளிக்கு கல்வி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதனால் தங்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்று கூறி பெற்றோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் பெற்றோர் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவ மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எங்களது குழந்தைகள் இந்த பள்ளியில்தான் பாதுகாப்புடன் கல்வி கற்க முடியும் என்று பெற்றோர் தெரிவித்தனர். இது குறித்து பள்ளியின் தாளாளர் சாருமதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
30 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு கேட்டு நில உரிமையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஆனால் அவர் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார். நான் இந்த நிலத்தில் பல லட்சங்கள் செலவு செய்து குழந்தைகளுக்கு பாதுகாப்பான கட்டடத்தை கட்டி உள்ளேன். ஆனால் திடீரென அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு சீல் வைத்து உள்ளனர். வேண்டுமென்றே என்னை குறிவைத்து அதிகாரிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதை சட்டப்படி எதிர்கொள்வோம். அந்த பகுதி மக்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த பள்ளியை செயல்படுத்தி வருகிறேன். ஆனால் இதற்கு பல வழிகளில் இடையூறு வருகிறது. பெற்றோர் தாங்களாகவே முன் வந்து இங்கே போராட்டம் நடத்துகின்றனர். நான் அவர்களை யாரையும் நிர்பந்திக்கவில்லை என்றார். பெற்றோர் செல்வி என்பவர் கூறுகையில்,
எங்களுக்கு இந்த பள்ளியில் பயின்றால் தான் எங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். அந்தப் பகுதியில் வேறு நல்ல பள்ளி கிடையாது. அதனால் இந்த பள்ளியை தொடர்ந்து நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாருடைய நிர்பந்தத்தின் பேரில் நாங்கள் போராட்டம் நடத்த வரவில்லை என்றார்.

Conclusion:என்னை வேண்டுமென்றே குறிவைத்து அதிகாரிகள் தாக்குதல் நடத்துகின்றனர் என்று பள்ளியின் தாளாளர் சாருமதி கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.