ETV Bharat / state

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப திருவிழா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - chithirai thiruvizha theppa urchavam

சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருச்சி சமயபுரம் அம்மன் கோயிலில் தெப்பத்தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

trichy
சித்திரை திருவிழா
author img

By

Published : Apr 22, 2023, 9:11 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம்!

திருச்சி: தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இக்கோயிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் நோய், நொடியின்றி வாழவும், குடும்பம் செழிக்கவும் மாசி மாதத்தில் நடைபெறும் பூச்சொரிதல் விழாக் காலங்களில் மரபு மாறி தன்னைத்தானே வறுத்திக் கொண்டு பக்தர்களுக்காக 28 நாட்கள் அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு. இதனால் இக்கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன்‌‌ சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சிறப்பு காட்சி அளித்தார்.

அந்தவகையில் 13 ஆம் நாளில் அம்மன் தெப்பத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டு சென்றனர். இந்த நிலையில் திருவிழாவின் 13 ஆம் நாளான நேற்று காலை அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்துக்கு சென்றடைந்தார்.

மீண்டும் மாலையில் 5 மணிக்கு அபிஷேகம் கண்டருளிய பின்னர் இரவு 8 மணிக்கு மேல் அம்மன் வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து கோயில் உள் பிரகாராம் கடை வீதிகளில் தேர் திருவீதி உலா வந்தது. மேலும் தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பய பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்தையும் சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் பணியாளர்கள், குருக்கள்கள், பக்தர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: Today Rasipalan : இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.