திருச்சி மாவட்டம் புத்தூர் மூலக்கொல்லையைச் சேர்ந்தவர் அமீர்கான் மகன் சிராஜ்தீன் (28). திருச்சி கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த முரளி மகள் மேனகா (25). இவர் புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியாகப் பணியாற்றி வந்துள்ளார். சிராஜ்தீனுக்கும், மேனகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர்.
இருவரின் காதல் விவகாரம் இரு வீட்டின் பெற்றோருக்கும் தெரியவந்த நிலையில், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மேனகா, கடந்த 27ஆம் தேதி விஷம் குடித்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காதலி விஷம் குடித்த தகவல் அறிந்த சிராஜ்தீன் மனவேதனையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேனகாவும் உயிரிழந்தார். காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக அறிவாலயத்தில் ஜின்னாவின் ஆவி - பொன். ராதாகிருஷ்ணன்