உலக சுகாதார மையம் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்காக உலகம் முழுவதும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
உலகளவில் நடைபெறும் நிகழ்ச்சியைப் போல தற்போது திருச்சியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விழிப்புணர்வின் ஒருபகுதியாக, மலைக்கோட்டை அக்டோபர் மாதம் முழுவதும் இரவு நேரத்தில் பிங்க் நிற மின்னொளியில் ஜொலிக்கச் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த வகையில் இந்தாண்டும் திருச்சி மலைக்கோட்டை இரவு நேரத்தில் பிங்க் நிற மின்னொளியில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. வழக்கமாக மலைக்கோட்டை இரவு நேரத்தில் வெண்ணிற ஒளியில் மிளிரும். தற்போது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியது உண்மையா?