ETV Bharat / state

குற்ற நடவடிக்கைகளைத் தடுக்க வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம்: திருச்சி காவல் ஆணையர்! - Trichy Police Commissioner Loganathan

திருச்சி: புகார்கள் மீது காவல் நிலையங்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாட்ஸ்அப் மூலம் தகவல் அளிக்குமாறு புதிய காவல் ஆணையர் லோகநாதன் கேட்டுக்கொண்டார்.

திருச்சி காவல் ஆணையர் லோகநாதன்
திருச்சி காவல் ஆணையர் லோகநாதன்
author img

By

Published : Jul 2, 2020, 5:14 PM IST

திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்தவர் வரதராஜூ. இவர் கடந்த 30ஆம் தேதி ஓய்வு பெற்றதால், அவருக்கு பதிலாக தஞ்சை சரக டிஐஜியாக இருந்த லோகநாதன் பதவி உயர்வு மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதன்பின் அவர் திருச்சி - புதுக்கோட்டை சாலையிலுள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையராக பொறுப்பேற்றார்.

அதைத் தொடர்ந்து அவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை சிறந்த முறையில் பராமரிப்பதற்கும், குற்ற நடவடிக்கையைத் தடுப்பதற்கும், கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கும், சாலை விபத்துகளை தடுப்பதற்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

தற்போது கரோனா வைரஸ் பரவுதல் காரணமாக பொதுமக்கள் தங்களது புகார்களை இணைய வழியிலும் அனுப்பி குறைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில், 9626273399 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக புகார்களைத் தெரிவிக்கலாம். அப்படி தெரிவித்தால், அதுகுறித்து சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மூலம் துரித நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதன் மூலம் புகார் கொடுப்பவர்களுக்கு, அவர்களது செல்போனுக்கு ஒப்புகை குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்படும்.

அதுபோல புகார்களின் தன்மைக்கு ஏற்ப காணொலி மூலம் புகார்களைத் தெரிவிப்பதற்கும், புகார்தாரர்களுக்கு ஐ.டி. (உள்ளீடு) தெரிவிக்கப்படும். அலுவலக வேலை நாட்களில் காலை 11 மணி முதல் 12 மணி வரை காணொலி வாயிலாக புகார்களைத் தெரிவிக்கலாம். கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு பொதுமக்களுடன் நல்லுணர்வு வலுக்கும் வகையில் தகுந்த முறையில் நடந்து கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, திருச்சி மாநகர காவல் துறையினருடன் இணைந்து கரோனா தொற்றை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இதுதவிர, மாநகரில் குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் ஏற்கனவே குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணுக்கோ அல்லது எனது செல்போன் எண்ணுக்கோ (9884447581) பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்”. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.