ETV Bharat / state

Rajendra Balaji Moved to Trichy Central Jail: ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம்

author img

By

Published : Jan 6, 2022, 5:00 PM IST

Rajendra Balaji Moved to Trichy Central Jail: மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறை நிர்வாக பாதுகாப்பு கருதி திருச்சி மத்தியச் சிறைக்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி அடைப்பு
ராஜேந்திர பாலாஜி அடைப்பு

Rajendra Balaji Moved to Trichy Central Jail: அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி ஏமாற்றியதாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்டையில் கடந்த நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த மோசடி வழக்கிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக முன்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அவர் தாக்கல்செய்தார். ஆனால், அவரது முன்பிணை மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைப்பு

இந்த நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான அவரை கைதுசெய்வதற்காக எட்டு தனிப்படைகளை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஏற்படுத்தினார். ஆனால், எங்குத் தேடியும் அவரை காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் முன்பிணை பெறுவதற்கான பணிகளில் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 5) தனிப்படையினர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வைத்து அவரை கைதுசெய்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் முன்னிறுத்தப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் பாதுகாப்பு, சிறை நிர்வாகம் காரணம் கருதி அவரை மதுரை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்ய சிறைத் துறை முடிவெடுத்தது. அதன்படி திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: சீமான் சொன்னார்... ஸ்டாலின் செய்கிறார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.