திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் வெள்ளையகோன்பட்டி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, சிறுகுறு விவசாய சான்று, முதலமைச்சரின் பசுமை வீடு, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் 829 பயனாளிகளுக்கு ரூ.85.91.533 லட்சம் நிதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேசுகையில்; " நாம் விவசாயம் செய்ய வேண்டுமென்றால் பெய்யக்கூடிய மழை நீரை சேமிக்க வேண்டும். அதனை கருத்தில் கொண்டுதான் அரசு குடிமராமத்து பணிகள் மூலம் இதுவரை இந்த பகுதியில் நான்கு குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அரசு இந்த பகுதியில் உள்ள 500 குளங்களை தூர்வார அனுமதிவழங்கி அதற்கான நிதியையும் ஒதுக்கியுள்ளது. விரைவில் அந்த பணிகள் துவங்கப்படவுள்ளது' என தெரிவித்தார்.