கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரயில் நடைமேடையில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக 10 ரூபாயாக இருந்த நடைமேடை கட்டணம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது கரோனா படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணத்தை மீண்டும் 10 ரூபாயாகக் குறைத்து தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது,
இதைத் தொடர்ந்து திருச்சி கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் இன்றுமுதல் 10 ரூபாயாகக் குறைத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள், பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா சூழல்: ரயில்வே நடைமேடை கட்டணச்சீட்டு 5 மடங்கு உயர்வு!