தென்காசி மாவட்டம் அணைக்கரையைச் சேர்ந்த முத்து என்பவரை, வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். இதையடுத்து, வனத்துறையினரால் தாக்கப்பட்டு முத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும், இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிபிஐ விசாரணை நடத்தக் கோரி கோஷமிட்டனர்.