திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. அப்போது மக்கள் பாதுகாப்பு மையத்தின் திருச்சி கிளையைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையில் தனியார் பள்ளிகளை மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மக்கள் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டாயுதபாணி கூறுகையில், "திருச்சி மாவட்டத்தில் செயல்படும் அரசு அனுமதி பெறாத தனியார் பள்ளிகளை மூடக் கோரி 2018ல் மூன்று முறை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் நலன் கருதி அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மாற்றுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த மனுக்கள் மீது இதுவரை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
2018ல் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் 97 அனுமதி பெறாத பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் நேற்று அனுமதி இல்லாத 74 பள்ளிகளை மூட உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவ்வாறு மூடப்பட வேண்டிய பள்ளிகள் குறித்த விபரம் பொது மக்களுக்கு தெளிவாக கிடைக்கப்படவில்லை" என தெரிவித்தார்.