ETV Bharat / state

'குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பேன்' - போதை ஆசாமி மீது பொதுமக்கள் புகார் - திருச்சி அண்மைச் செய்திகள்

நல்லாம்பிள்ளை பகுதியில் குடிபோதையில் குடிநீர் தேக்கத் தொட்டியின் மேல் ஏறி நின்று, தனக்கு ”வேலை தரவில்லையெனில் குடிநீரில் விஷம் கலப்பேன்” என மிரட்டல் விடுத்த நபர் மீது, பொதுமக்கள் காவல் துறையில் புகாரளித்துள்ளனர்.

பொதுமக்கள் புகார்
பொதுமக்கள் புகார்
author img

By

Published : Jun 20, 2021, 7:59 AM IST

திருச்சி: மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளையைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மாரியப்பன் (40). இவர் அதே பகுதியில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீரை திறந்துவிடும் வேலையை தனக்கு வழங்கும்படி, ஊராட்சி மன்ற நிர்வாகிகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஜூன்.19) மாலை அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏறி நின்று, தனக்கு வேலை தரவில்லை என்றால் குடிநீரில் விஷம் கலந்துவிடுவேன் என குடிபோதையில் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த பொது மக்கள், நடந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் இது குறித்து வட்டாட்சியரிடமும் முறையிட்டனர். இதனையடுத்து உரிய விசாரணை நடத்தி சமந்தபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க : காதலியின் அண்ணனைக் கடத்தி கொலை மிரட்டல் விடுத்த காதலன் உள்பட 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.