திருச்சி மாவட்டம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் வசந்தன் (27). இவர் நேற்று முன்தினம் (அக்.10) மாலை கொள்ளிடம் ஆற்றில் நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிரில் ஐந்து பைக்குகளில் வந்தவர்கள் பாலத்தை அடைத்துக் கொண்டு வந்துள்ளனர். இதை பார்த்த வசந்தன், ஓரமாக செல்லலாமே என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பைக்கில் வந்தவர்கள் வசந்தனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து வசந்தன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (24), இந்திரா நகரைச் சேர்ந்த கணேசன் (24) மற்றும் திருச்சி ஓடத்தெரு காவிரி பாலத்தை சேர்ந்த மனோகரன் (24) ஆகிய மூன்று பேரையும் முதற்கட்டமாக கைது செய்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய 10 நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்