திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 144 தடை உத்தரவு பாதுகாப்புப் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க, ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாக ட்ரோன் மூலம் பொதுமக்களைக் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணப்பாறை, அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் திருட்டுத்தனமாக தொடர்ந்து மது விற்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், சோதனை மேற்கொண்டு மதுபாட்டில்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மதுபாட்டில்களை கிராம நிர்வாக அலுவலர் பெரியண்ணன் முன்னிலையில், மதுவை கீழே ஊற்றியும், பாட்டில்களை உடைத்தும் அதனை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மணப்பாறை காவல் நிலையத்தில் மூட்டை, மூட்டையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், போலீசார் சிலவற்றை மட்டுமே கீழே ஊற்றி அழித்ததாக பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு!