ETV Bharat / state

"தமிழில் பெயர் பலகை வையுங்கள்" - ராமதாஸ் வேண்டுகோள்! - தமிழைத்தேடி 2023

தமிழில் எழுதப்படாத வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் மீது மை பூசி அழிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் எழுதுக - ராமதாஸ் வேண்டுகோள்!

author img

By

Published : Feb 28, 2023, 11:19 AM IST

திருச்சி: பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘தமிழைத்தேடி’ பரப்புரை பயணத்தின் 7ஆம் நாள் பொதுக்கூட்டம் திருச்சியில் நேற்று (பிப்.27) நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது என தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது.

திருச்சியில் நடைபெற்ற தமிழைத்தேடி பரப்புரை பயண பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

தமிழ் மொழி அழிந்து விடும் என யுனெஸ்கோ அறிவித்துள்ளதாக ஒரு கூட்டம் அவதூறு பரப்பி வருகிறது. ஆனால் யுனெஸ்கோ அவ்வாறு எதையும் கூறவே இல்லை. தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும். நாம் தற்போது கொச்சைத் தமிழில்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நலத்துறையும் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்படி வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி, வணிக நிறுவனப் பெயர் பலகைகளை தமிழில் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்த முறை திருச்சிக்கு வரும்போது தமிழில் பெயர் பலகை வைத்துள்ள வணிகர்களுக்கு மலர் கொத்து கொடுத்து பாராட்டுவேன். தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் அனைவரும் தங்கள் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். பெயர் பலகையில் 5 பங்கு தமிழ் மொழியிலும், 3 பங்கு ஆங்கில மொழியிலும், 2 பங்கு அந்த வணிகர் விரும்பும் மொழியிலும் வைத்துக்கொள்ள சட்டம் உள்ளது.

அந்தச் சட்டப்படி பெயர் பலகைகளை வணிகர்கள் மாற்றி அமைக்காவிட்டால், ஒரு மாதம் இடைவெளி விட்டு, கருப்பு மை கொண்ட வாளியையும், ஏணியையும் தூக்கிக் கொண்டு வருவோம். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளி விடாதீர்கள். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. பிற மொழி கலக்காமல் ஒரு மொழியில் பேச வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

தமிழைத் தேடிய எனது பயணத்தை வாழ்த்தி வழியனுப்ப வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்" என்றார். கடந்த 21ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த பயணம், இன்று (பிப்.28) மதுரையில் நிறைவடைய உள்ளது. மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் உடன் சட்டமன்ற உறுப்பினர் கோ.க.மணி, பாவாணர் தமிழியக்கத்தின் அமைப்பாளர் முனைவர் கு.திருமாறன், உலக திருக்குறள் பேரவை துணைத் தலைவர் திருக்குறள் சு.முருகானந்தம், எழுத்தாளர் ஜவஹர் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ் வளர்ச்சிக்கு கூடுதல் பல்கலைக்கழகங்கள் வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.