தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று ( ஜூலை 16) வெளியாகின. திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி நிலவரம் குறித்து ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் நடந்த பன்னிரென்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 250 பள்ளிகளைச் சேர்ந்த 13, 822 மாணவர்களும் , 17, 226 மாணவிகளும் ஆக மொத்தம் 31,048 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
இவர்களில் 12 ஆயிரத்து 991 மாணவர்களும், 16 ஆயிரத்து 796 மாணவிகளும் ஆக மொத்தம் 29 ஆயிரத்து 787 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவீதம் 95.94 சதவீதம் ஆகும். மாநில அளவில் திருச்சி மாவட்டம் 6வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை காட்டிலும் 2.4 சதவீதம் கூடுதலாகும் என்றார்.
இதையும் படிங்க: ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் புதிய உறுப்பினர்களை ஒரு மாதத்திற்குள் நியமிக்க உத்தரவு!