ETV Bharat / state

திருச்சியில் ரூ. 1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்ட கடத்தல் தங்கம் சுங்க அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்
author img

By

Published : Jul 12, 2019, 3:10 PM IST

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய ஏர் ஏசியா விமானம் திருச்சியில் தரையிறங்கியது. அதில் சில பயணிகளின் நடவடிக்கையில் சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தூத்துக்குடியைச் சேர்ந்த நியாஸ், சென்னையைச் சேர்ந்த சல்மான்கான், ரியாஸ்கான், லியாக்கத் அலி, அமான் அலிகான், இளையான்குடியைச் சேர்ந்த ரசூலுதீன் ஆகியோரது உடமைகளையும் சோதனையிட்டதில் அவர்கள் அணிந்து வந்த கால்சட்டையில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து இரண்டாயிரத்து 430 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ஆயிரத்து 832 கிராம் செயினும், ஆயிரத்து 317 கிராம் தங்கக் கட்டியும் சுங்க அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆறு பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.07 கோடி ரூபாய் இருக்கலாம் என சுங்க அலுவலர்கள் கூறியுள்ளனர்.

Intro:திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Body:திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் தூத்துக்குடியைச் சேர்ந்த நியாஸ், சென்னையைச் சேர்ந்த சல்மான்கான், ரியாஸ்கான், லியாக்கத் அலி, அமான்அலிகான், இளையான்குடியைச் சேர்ந்த ரசூலுதீன் ஆகியோரது உடமைகளையும் சோதனையிட்டனர். அவர்கள் அணிந்து வந்த பேண்டில் பேஸ்ட் வடிவில் மறைத்து 2 ஆயிரத்து 430 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுல் ஆயிரத்து 832 கிராம் செயினும், ஆயிரத்து 317 கிராம் தங்கம் கட்டியாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 6 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.07 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. Conclusion:பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.07 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.