மணப்பாறை : திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த குதிரைகுத்திப் பட்டியைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(33). கூலித் தொழிலாளி. நேற்று (ஜூன்.10) எண்டப்புளியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து, தனது இருசக்கர வாகனம் மூலம் சந்திரசேகர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சமத்துவபுரம் எனுமிடத்தில் மணப்பாறையில் இருந்து புத்தாநத்தம் நோக்கி சென்ற வேன் எதிர்பாராத விதமாக, எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து புத்தாநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : கடன் தவணை வசூல்: பெண்களை மிரட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு