விருத்தாசலம் : விருத்தாசலத்தில் உள்ள மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றிலும் மிகச் சிறப்புடையதாகும். இவை தென்னாட்டில் உள்ள காசி கோயில்களை போன்று சம்பந்தர், அப்பர், சுந்தரர் அருணகிரிநாதர், குமாரதேவர், துறைமங்கலம் சிவப்பிரகாசர், குருநமச்சிவாயர், ராமலிங்க சுவாமிகள், சொக்கலிங்க அடிகள் முதலிய பெரியோர்களால் போற்றப்பட்டு புகழ்மிக்க சிறப்பை பெற்றுள்ளது. சிவபெருமான் பஞ்சாட்சரம் மந்திரம் உபதேசம் செய்து, இத்தலத்தில் தங்கி ஈசனையும் அம்பாளையும் வழிபட்டு பல முனிவர்களும் பலம் பொருந்திய வெற்றிகளை பெற்றிருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.
இத்தகைய பெருமைகள் கொண்ட அருள்மிகு விருத்தாம்பிகை மற்றும் பாலாம்பி
சமீபத்தில், மாசிமக திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் மாசி மக கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முப்பெரும் தெய்வங்களுக்கு மேளதாளங்களுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. மேலும், கோயில் உட்புறம் நான்கு திசைகளிலும் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. கொடியேற்றத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து வருகின்ற 15 2 2019 அன்று ஆறாம் நாள் திருவிழாவாக விபசித்து முனிவருக்கு காட்சி அளிக்கும் திருவிழாவும் 18 2 2019 அன்று மாசி மக தீர்த்தவாரியும் 20.02.2019 அன்று தெப்பத்திருவிழாவும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.