திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமான தலமாகவும், சிறப்புமிக்க தலமாகவும் விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான பல நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அரசு அவற்றைத் தொடர்ந்து மீட்டு வருகிறது.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருவானைக்காவல் அருகே, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுடன் இணைந்த கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்குச் சொந்தமான 50 சென்ட் நிலம் உள்ளது.
இதனிடையே, தற்போது 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தில், சிலர் செங்கல் சுவருடன் ஷெட் அமைத்து ஆக்கிரமிக்க முயன்றனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, கோயில் வழக்கறிஞர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், நேற்று முன்தினம் (பிப்.13) பொக்லைன் இயந்திரத்துடன் சென்று, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறக்கட்டளை நிலத்தை மீட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - அண்ணாமலை குற்றச்சாட்டு