ETV Bharat / state

எடப்பாடி பழனிசாமியை திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன்.. ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு! - தொண்டர்கள் மீட்பு குழு

O Panneerselvam: எடப்பாடி பழனிசாமியை விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன் என்றும், அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில் உரிய இடத்தில் தெரிவிப்பேன் என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 8:07 AM IST

Updated : Jan 11, 2024, 8:58 AM IST

எடப்பாடி பழனிசாமியை திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன்

திருச்சி: நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜன.10) திருச்சியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரலில் நடக்க உள்ளது. நாட்டை 10 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆண்டுள்ளார். எனவே, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அதிமுகவில் உள்ளவர்களும், எடப்பாடி ஆதரவில் உள்ளவர்களும் என்னிடம் பேசி வருகின்றனர். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என கூறினார்.

தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவர் என்ற கேள்விக்கு, இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார். தொடர்ந்து, “சுயநலம் காரணமாக பழனிசாமி ஒன்று சேரக் கூடாது என்று கூறுகிறார். கடந்த 50 ஆண்டுகளாக, தியாக வாழ்க்கை மேற்கொண்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சட்ட விதிப்படி இயக்கத்தை நடத்தியுள்ளனர். ஆனால், எடப்பாடியுடன் இருப்பவர்கள், நாங்கள் என்ன சொன்னாலும் அவர் கேட்க மறுக்கிறார் என்று மன வேதனையோடு எங்களிடம் பேசுகின்றனர்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதங்களில் கோடநாடு கொள்ளை வழக்கை விசாரித்து, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம் என்றனர். ஆனால், தற்போது வரை அந்த வழக்கை தாமதப்படுத்துகின்றனர். எடப்பாடி பழனிசாமியை, விரைவில் திகார் ஜெயிலுக்கு அனுப்புவேன். அதற்கான ரகசியத்தை உரிய நேரத்தில், உரிய இடத்தில் தெரிவிப்பேன்.

அ.தி.மு.க சின்னம் தொடர்பான விவகாரத்தை, உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். வரும் ஜனவரி 19ஆம் தேதி, பொதுக்குழு உள்பட அனைத்து நடவடிக்கைகளும் விசாரிக்கப்படும். அதில் கிடைக்கும் தீர்ப்பின் அடிப்படையில், நீதிக்கு தலை வணங்குவோம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அள்ளித்தந்த மகராசி! மகளின் நினைவாக ரூ.4 கோடி நிலம் பள்ளிக்கு தானம்- நெகிழும் ஆசிரியர்கள்!

Last Updated : Jan 11, 2024, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.