ETV Bharat / state

கரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படவில்லை - சுகாதாரத் துறை செயலாளர் - no side effects

திருச்சி: தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை செயலாளர்
சுகாதாரத் துறை செயலாளர்
author img

By

Published : Jan 17, 2021, 3:42 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 166 மையங்களில் நேற்று(ஜன.16) தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று (ஜன.17) திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகளை மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு அவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கரோனா தடுப்பூசி உட்செலுத்திகொண்ட சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் 16,600 பேருக்கு தடுப்பூசி செலுத்த தயாராக இருந்த நிலையில் 3,126 மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி என்பது இலக்கு சார்ந்த திட்டம் கிடையாது. பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளோம். இன்றும் மாநிலம் முழுவதும் 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

மருத்துவ கல்வி நிறுவனங்களில் தடுப்பூசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 111 பேரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 100 பேரும் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டனர். மருத்துவத் துறை சார்ந்தவன் என்ற அடிப்படையில் நான் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்.

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கரோனா குறைவதற்கு காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் முக்கிய காரணமாக இருந்தது. தற்போது தடுப்பூசி முகாம்கள் கரோனாவை குறைக்க கைகொடுக்கும். தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

தடுப்பூசி, நோய் தடுப்புக்கான முக்கியமான மைல்கல். மாநிலத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் விகிதம் குறைந்துள்ளது. நேற்று தடுப்பூசி போட்ட அனைவருக்கும் இதுவரை பக்க விளைவுகள் எதுவும் இல்லை" என்றார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் வனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைவு- அமைச்சர் பென்ஜமின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.