ETV Bharat / state

வடுகபட்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துகிடந்த 9 மயில்கள் - மயில்கள்

திருச்சி: மணப்பாறை அருகே தென்னந்தோப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒன்பது மயில்கள் இறந்துகிடந்தன. இது குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

nine peacock dead in manapparai
தென்னந்தோப்பில் மர்மமான முறையில் இறந்துகிடந்த 9 மயில்கள் - வனத்துறை விசாரணை
author img

By

Published : Apr 17, 2021, 3:04 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடுகபட்டி பகுதியில் தனிநபருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் மயில்கள் இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனச்சரகர் மகேஷ்வரன் தலைமையிலான மணப்பாறை வனத் துறையினர், இறந்துகிடந்த ஒரு ஆண் மயில், எட்டு பெண் மயில்களின் உடல்களைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து உடற்கூராய்வு முடிவுகள் வந்த பிறகு அருகில் உள்ள தோட்டத்தைச் சேர்ந்தவர்களிடம் மயில்கள் இறப்புக்கான உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வனத் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்’ - விவேக் இறப்புக்கு மோடி இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.