மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் திருச்சியிலும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி ஜமாத்துல் உலமா அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்திற்கு திருச்சி ஜமாத்துல் உலமா தலைவர் ரூஹில் ஹக் தலைமை வகித்தார்.
இப்போராட்டத்தில் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த கருப்புச் சட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறைவேற்றமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் எதிர்வரும் தேர்தலில் அதற்கான பலனை அதிமுக அனுபவிக்க நேரிடும் என்று போராட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிஏஏவை வாபஸ் பெறவிட்டால் போராட்டம் தொடரும்! - திருச்சி மைதானத்தில் அதிரும் முழக்கம்