ETV Bharat / state

இவ்வளவு பேர் அழுததைக் கொண்டு விஜயகாந்த் எப்படி வாழ்ந்தார் என உணரலாம்: எம்.பி திருச்சி சிவா

Vijayakanth:நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் மறைவு, தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என எம்பி திருச்சி சிவா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
விஜயகாந்த் குறித்து எம்.பி., திருச்சி சிவா உருக்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 12:53 PM IST

Updated : Dec 29, 2023, 3:40 PM IST

விஜயகாந்த் குறித்து எம்.பி., திருச்சி சிவா உருக்கம்

திருச்சி: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த 26ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட திணறியதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து, விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் தீவுத்திடலில் குவிந்து வருகின்றனர். அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனக் கட்சி பாகுபாடு இல்லாமல் பல தரப்பினரும் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்த் மறைவு தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருச்சி சிவா அவருடைய பழகிய அனுபவங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 'விஜயகாந்த் திரை உலகில் 'புரட்சி கலைஞர்'-ஆக பட்டம் பெற்று கேப்டன் விஜயகாந்த் என சிறந்த நடிகராக இடம் பிடித்தார். திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒரு சில இலக்கணங்கள் உண்டு என சொல்லப்பட்ட காலத்தில் அதை முறியடித்து நிலை நின்றவர்களில் முக்கியமானவர், விஜயகாந்த். திரை உலகில் ரஜினிகாந்த், கமல் மிக பிரபலமாக இருந்த கால கட்டத்தில் அவர்களுக்கு இணையாக வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அரசியல் வரலாற்றில் கருணாநிதி மிகப்பெரிய ஆளுமை, மிகப்பெரிய தலைவர். அப்போது ஆட்சியில் ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில், இவர் அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் ஆகினார். எதிர்கட்சித் தலைவர் ஆகியப் பிறகு, அவருடைய துணிச்சல் ஆன பேச்சுங்கள் யாராலும் மறுக்க முடியாது.

திரைப்படத்தில் அவருடைய நடிப்பு ஆக்ஷ்ன் ஹீரோ, குணச்சித்திர நடிகர் என காலம் மாறி அனைத்து தரப்பினரும் கவரும் படி அவரது நடிப்பில் மற்றும் திரைப்படங்கள் வெளிவந்தன. தனிப்பட்ட வகையில் அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். எங்களது பிறந்த நாளுக்கு நாங்கள் இருவரும் வாழ்த்து சொல்லி கொள்வோம். நாங்கள் அரசியலில் இரு வேறு துருவங்களாக இருந்தபோதிலும், எங்கள் நட்பு பழுதடையவில்லை. அவர் நடிகராக இருந்தபோது, டெல்லிக்கு படப்பிடிப்புக்கு வரும்போது என்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அவருடைய மறைவு தமிழக அரசியல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு' என விஜயகாந்துடன் பயணித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

பருவகால சிந்தனை கொண்டவர் ஆக இருந்தார். அவருடைய அன்பு அரவணைப்பு நடிகர்கள், துணை நடிகர்கள் யாராக இருந்தாலும், அவர் உண்ணும் உணவை அவர்களும் சாப்பிட வேண்டும் என சொல்லக்கூடியவர். அவருடைய மறைவு மிகப்பெரிய துயரங்களைக் கொடுத்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் அவருடைய இறுதி அஞ்சலியில் நின்று கண்ணீர் விடுவது பெரும் வலியை கொடுக்கிறது. ஒரு மனிதன் இறந்த பிறகு அவருக்கு பின்னால், எத்தனைப் பேர் அழுது கொண்டு உள்ளார் என்பதை பார்த்தால், அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை உணர முடியும்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்' - ரஜினிகாந்த் விஜயகாந்த் குறித்து உருக்கம்

Last Updated : Dec 29, 2023, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.