உலகப் புகழ்பெற்ற கல்லணையில் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து 15 அல்லது 16ஆம் தேதிகளில் கல்லணையில் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டு பன்னிரெண்டாம் தேதி மேட்டூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து 16ஆம் தேதி காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று காலை பத்தரை மணி வரை மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணைக்கு வராததால் அமைச்சர்கள், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் என அனைவரும் தண்ணீர் திறப்பிற்காகக் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லணை தண்ணீரை திறந்துவிடுவதற்காக அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ். மணியன், புதுச்சேரி வேளாண்மைத் துறை அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் காத்திருந்தனர்.