திருச்சி மாவட்டம் கலையரங்கத்தில் உள்ளாட்சித் துறை சார்பில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, ”செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பருவ நிலை மாற்றம் காரணமாக மழையை எதிர்நோக்கி தமிழ்நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறை சார்பில் 1.63 லட்சம் களப்பணியாளர்கள் மூலம் கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டெங்கு போன்ற காய்ச்சல் காரணமாக ஒரு உயிரிழப்புகூட ஏற்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது” என்றார்.