கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கால் ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு, அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் பலர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று திருச்சி மதுரை ரோட்டில் உள்ள சிந்தாமணி கியாஸ் குடோன் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவகர், வெல்லமண்டி சண்முகம், அன்பழகன், ஐக்குலின் சந்திரு, கணேஷ், சுரேஷ் குப்தா, வழக்கறி ஒர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்தகொண்டனர். பொதுமக்கள் தகுந்த இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும் நிவாரண உதவிகளைப் பெற்றுச் சென்றனர்.
இதையும் படிங்க : மதுபானங்களை டோர் டெலிவரி செய்யக் கோரி வழக்கு - மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்