திருச்சி: திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.28 கோடியே 42 லட்சம் மதிப்பில் தரைமட்டத் தொட்டி கட்டுதல், புதிதாக நீர் சுற்றுவட்ட குழாய்கள் அமைத்தல், நீர் பரிசோதனை ஆய்வகம் மற்றும் நடைபாலம் உள்ளிட்ட பணிகளை நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது" என்றார்.
பாஜகவுக்கு இடையூறு செய்தால் 'திமுகவின் பிசினஸில் கை வைப்போம்’ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுகவினர் மிசாவை பார்த்தவர்கள், அண்ணாமலைக்கு எல்லாம் பயப்பட தேவை இல்லை. தவறு செய்தால் தான் பயப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 நாள்களில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி!