திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (மே.19) ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "திருச்சி அரசு மருத்துவமனையில் 834 பேர் உள்நோயாளிகளாக தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் ஆக்ஸிஜன் உடன் கூடிய 44 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அரசு மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்ஸிஜன் வசதி செய்து தரப்படும். தற்போதைக்கு ஆக்ஸிஜனுக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை" என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: மதுரை வீரனுக்கு தடுப்பூசி