ETV Bharat / state

பாலியல் குற்றச்சாட்டு புகார்களை தெரிவிக்கும் முறை எளிதாக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - minister anbil mahesh Poyyamozhi says system for reporting sexual harassment complaints will be facilitated

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
author img

By

Published : Nov 24, 2021, 9:24 PM IST

திருச்சி: திமுக திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா இன்று (நவ.24) நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள விஎம் நகரில் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

புகார் தெரிவிக்கும் முறையை எளிதாக்கப்படும்

இதனையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பான புகார்களை மாணவிகளும், பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417,1098 என்ற எண் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அங்கு அருகில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் பதிவிட வேண்டும் என கூறியுள்ளோம்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

மேலும், வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது, எல்லா இடத்திலும் உளவியல் ரீதியாக கவுன்சிலிங் தேவைப்படுகிறது. இதற்கென உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டந்தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தயங்காமல் புகார் தெரிவிக்கலாம்

14417 புகார் மையம் எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்து நாளை (நவ.25) சென்னையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். மாணவர்கள் பாதிக்கபடக் கூடாது என்பது தான் அரசின் விருப்பம். பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 66 லட்சம் என்று இருந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 71 லட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. எந்தெந்த அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு அதிகம் தேவைப்படுகிறதோ, அதைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அரசாங்கத்தின் விருப்பம்

அரசுப் பள்ளிக்கு வருகின்ற மாணவர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் விருப்பம். தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது அவ்வாறு வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம்" என அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட 'மாநாடு' - வலியோடு தெரிவித்த சுரேஷ் காமாட்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.