மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் திருச்சி மாவட்ட செயலாளருமான குமார் தலைமையில் அக்கட்சியினர் திரளாகச் சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு கூடியிருந்த கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தேமுதிக சார்பில் மாநகர மாவட்டச் செயலாளர் கணேஷ் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு கட்சியினர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மூன்று கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-30 செயற்கைக்கோள்